ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் உள்ள கடற்படை வீரர்கள் 35 பேர் உள்பட 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து கடற்படை தளம் மூடப்பட்டு கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

ராமநாதபுரத்தில் நேற்றைய (24ந்தேதி)  நிலவரப்படி 338 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 144 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது  190 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி பகுதியில் உள்ள இந்த கடற்படைக்கு சொந்தமான, ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்தில் உள்ள 35 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதையடுத்து, கடற்படை தளம் தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.