பெங்களூர்:

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா அறைவில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சசிகலா மற்றும் மேலு சில சிறை கைதிகளிடம் இருந்து செல்போன்கள், போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக  தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மீது ஏற்கனவே சிறை விதிகளை மீறி, சிறை வார்டன்களுக்கு லஞ்சம் கொடுத்து சிறைக்கு வெளியே சுற்றி வந்ததாக புகார் உள்ளது. இதுகுறித்து விசாரணை கமினும் அமைக்கப்பட்டுள்ளது.

இநநிலையில், அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், சிறையில் பல சந்தேகத்திற்கான நிகழ்வுகள் நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து,  நேற்றுமுன்தினம்   இரவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.‘

பெங்களூரு  இணை ஆணையர் சதீஷ் குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் சிறை வளாகத்திற்குள்  அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, சசிகலா, இளவரசி உள்பட சிலரிடம் இருந்து பல கைதிகளிடம் இருந்து 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 25க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டதாகவும்  கூறப்படுகிறது.

மேலும், கம்யூட்டரில் உபயோகப்படுத்தும்  பென் டிரைவ், போதைப் பொருட்களான  கஞ்சா, அபின்  பாக்கெட்டுகளும்  கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே  சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதுபோல அவர் சொகுசாக இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்தே இந்த அதிரடி சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.