வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் மட்டும் வெயிலின் கொடுமைக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 95 பேர் மரணம் அடைந்துள்ளனர் என மாகாண கவர்னர் கேட் பிரவுன் தெரிவித்து உள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், அமெரிக்காவில் வெயிலின் தாக்கமும் தீவிரமாக உள்ளது. வெயிலின் கொடுமையான தாக்குபிடிக்க முடியாமல், ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அமெரிக்காவின் வடமேற்கு மற்றும் கனடா ஆகிய நாடுகளில் கடந்த வாரத்தில் சுட்டெரிக்கும் அனல் காற்றுக்கு 500க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஓரேகான் மாகாணத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தல் வெயில் பாதிப்புக்கு 95 பேர் உயிரிழந்துள்னர் என்ற அதிர்ச்சி தகவலை மாகாண ஆளுநர் பிரவுன் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஒரு வாரமாக பசிபிக் வடமேற்கு பகுதியில் நிகழ்ந்து வரும் கடுமையான வெப்ப அலைகள் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர், இந்த உயிரிழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியவர், “இது போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து மதிப்புரை செய்து வருகிறோம், இதை தடுக்கும் வகையில் அடுத்த முறை மேலும் சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்கிறோம்” என்று தெரிவித்து உள்ளனர்.
மேலும், வெப்பத்தை தணிக்க மாகாணத்தில் குளிரூட்டும் மற்றும் நீர் நிலையங்களை அமைப்பதும் உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றவர், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் வலியுறுத்தி உள்ளார்.