மீரட்:

மீரட்டில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக, இதுவரை 8 பேர் உயிரிழதந்துள்ளனர் என்று மீரட் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் பன்னிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இங்கு மொத்தமக 81 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மீரட் மாநில தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜ்குமார் தெரிவித்ததாவது:

மீரட்டில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி இதுவரை 20 ராணுவ வீரர்கள் உள்பட 81 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி 11 ராணுவ வீரர்கள் சிகிச்சைக்கும் பின் மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 9 ராணுவ வீரர்கள் ஐந்து நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை 387 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பன்றிக்காய்ச்சல் பரவி வருவதை தடுக்க ஐந்து பேர் கொண்ட மருத்துவர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.