டெல்லி: கலப்பட உணவை விற்றால் ரூ.25,000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை வழங்க பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்து உள்ளது.
நாடு முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சி போல கலப்பட உணவுகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் புதுப்புது வகையில் ஏராளமான நோய்களும் பரவி வருகின்றன. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கலப்பட உணவுகள், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த கலப்படம், ஆரோக்கிய ஆபத்தை ஏற்படுத்துகிறது.
உணவுக் கலப்படம் ஒரு தீவிர பிரச்சனையாகும், ஏனெனில் இது நுகர்வோருக்கு நோய் அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும். உணவில் கலப்படத்தின் அறிகுறிகளையும் , கலப்படம் செய்யப்பட்ட உணவில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எவ்வாறு பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதனால், .பெரும்பாலான நாடுகளில், உணவு கலப்படம் செய்வதை தடுக்க கடும் இயற்றப்பட்டு, அந்த சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் தண்டனைக்குரியது. உணவில் தீங்கு விளைவிக்கும் அல்லது தரக்குறைவான பொருட்களை வேண்டுமென்றே சேர்க்கும் உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவிலும் உணவு கலப்படத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற குழு பரிந்து செய்துள்ளது. தற்போதுள்ள சட்டப்படி, கலப்படமான உணவை விற்பனை செய்வோருக்கு 6 மாதம் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படுகிறது. ‘
கலப்படமான உணவால் பொதுமக்கள் உடல்நலனில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அத்தகைய உணவை விற்பனை செய்வோருக்குத் தற்போது வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லை. “உணவு கலப்படம் தடுப்புச் சட்டம், 1954 இன் கீழ் பெரும்பாலான வழக்குகள், மாதிரி சேகரிப்பு போன்றவற்றில் உள்ள நடைமுறைக் குறைபாடுகளால் விடுவிக்கப்படுகின்றன” என்றும், இதற்கான தண்டனையை உயா்த்த முடிவு செய்துள்ளோம்’ என உள்துறை விவகாரங்களின் நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான ப்ரிஜ்லால் தெரிவித்துள்ளார். இந்த தண்டனை மற்றும் அபராதத்தை உயர்த்தி உணவு கலப்படுத்த கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியவர், கலப்படமான உணவு அல்லது பானங்களை விற்பனை செய்வோருக்கு குறைந்தபட்சம் 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.25,000 அபராதம் விதிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது என கூறினார்.
உணவுக் கலப்படத்தைத் தவிர்ப்பது எப்படி?
உணவுப்பொருட்களில் கலப்படத்தைத் தவிர்ப்பதற்கான எளிதான வழிகளில் ஒன்று நம்பகமான மூலத்திலிருந்து (அதாவது உருவாகும் இடம் – விவசாயிகள்) உணவை வாங்குவதாகும். இது ஒரு உள்ளூர் விவசாயியாக இருக்கலாம், உழவர் சந்தையாக இருக்கலாம் அல்லது உங்களுக்குத் தெரிந்த மளிகைக் கடையாக இருக்கலாம்.
உணவு கலப்படத்தைத் தவிர்க்க மற்றொரு வழி உணவை நீங்களே சமைப்பது. இந்த வழியில், உங்கள் உணவில் என்னென்ன பொருட்கள் செல்கின்றன என்பதை நீங்கள் சரியாக அறிவீர்கள், மேலும் அவை பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இறுதியாக, உணவைத் தயாரிப்பதற்கு முன் எப்போதும் உங்கள் கைகளையும் சமையல் பாத்திரங்களையும் நன்கு கழுவுங்கள், இது உணவில் கலப்படம் செய்யக்கூடிய அசுத்தங்களை அகற்ற உதவும்.