பாட்னா:
பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் இன்று காலை பெரும் விபத்து ஏற்பட்டது. பெலா ஃபேஸ்-2ல் அமைந்துள்ள நூடுல்ஸ் தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்தது. இதில் அங்கு பணியாற்றி வந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காயமடைந்த 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வெடிவிபத்தில் அதை ஒட்டிய வளையல் மற்றும் மாவு தொழிற்சாலையும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த இருவர் காயமடைந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel