கேரளா: கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீடீரென ஏற்பட்ட வெடிப்பால் ஏற்பட்ட  தீ  புகை சம்பவத்தில் குறைந்தது 4 பேர் பலி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  நேற்று நளிளிரவு அவரச சிகிச்சை பிரிவில் உள்ள .பி.எஸ்.  அறைக்குள், மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த பேட்டரி வெடித்து புகை பரவியது. இந்த புகை மற்றும் தீயில் சிக்கி  4 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும்,   புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலில்  பல நோயாளிகள் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடடினயாக  வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த சம்பவம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அருகே உள்ள பகுதிகளில் வசிக்கம் மக்களிடையே  பீதியை ஏற்படுத்தியது..

இந்த வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இந்த தீ விபத்து சம்பவம் இரவு 8 மணி அளவில் நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது. இந்த தீவிபத்தில்,  வயநாட்டின் கல்பெட்டா மேப்பாடியை பூர்வீகமாகக் கொண்ட நசிரா (44) இறந்துவிட்டதாக, அந்த பகுதியைச்சேர்ந்த எம்எல்ஏ  டி. சித்திக்  ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தினார். திடீரென  “புகை எழுந்தபோது, இந்த நோயாளி  வென்டிலேட்டரிலிருந்து மாற்றப்படும்போது அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது,”

புகை காரணமாக மூச்சுத் திணறல் காரணமாக இந்த இறப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், நிலைமை விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தாகவும், ஆரம்பத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் உறுதிப்படுத்தினார்.   முன்னெச்சரிக்கையாக 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.