குருக்ஷேத்திரா:

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திராவில் உள்ள மதானா கிராமத்தில் அரசு முகாமில் இருந்த 25 பசுக்கள் இறந்துள்ளது. தொடர் மழையான் தீவனம் கிடைக்காமல் பசுக்கள் இறந்திருப்பது தெரியவந்துளளது.

தொடர் மழையால் முகாமில் நீர் தேங்கியுள்ளது. சதுப்பு நிலப்பகுதியில் சிக்கி மாடுகள் இறந்துள்ளது. இதர மாடுகள் நோய்வாய்ப் பட்டு இறந்திருப்பதாக கிராமத் தலைவர் கிரன்பாலா தெரிவித்துள்ளார்.

ஹரியானா கவ் சேவா கமிஷன் தலைவர் பானி தாஸ் மங்கலா மற்றும் சில மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இந்த முகாமை பார்வையிட்டு சூழ்நிலையை ஆய்வு செய்து வருகின்றனர். நோய் தாக்குதலுக்கு உள்ளான மாடுகளை கர்னாலில் உள்ள முகாமிற்கு மாற்ற கலெக்டர் நரீந்தர் பால் மாலிக் உத்தரவிட்டுள்ளார். பழுது பார்க்கும் பணி முடியும் வரை இதர மாடுகளை மாவட்டத்தில் செயல்படும் 20 முகாம்களுக்கு பிரித்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ கிரிஷன் கவுசாலா முன்னாள் தலைவர் அசோக் பாப்னேஜ இந்த முகாமில் உள்ள மாடுகளுக்கு தீவனங்களை வழங்கி வருகிறார். அவர் கூறுகையில்,‘‘ மாவட்ட நிர்வாகம் இங்கு சுமார் 7 ஏக்கரில் காம்பவுண்டு சுவர் கட்டியுள்ளனர். அதை எப்படி கட்டினார்கள் என்பது தெரியவில்லை. தற்போது இங்கு 600 மாடுகள் உள்ளன. ஆனால், அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. தீவனம் முழு அளவில் இல்லை. குடிநீரும் இல்லாமல் மாடுகள் அவதிப்படுகின்றன’’ என்றார்.

மாவட்ட கால்நடை துறை துணை இயக்குவர் தர்மீந்தர் சிங் கூறுகையில், மாடுகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சில நோய் தாக்குதலுக்கு ஆளான மாடுகள் சதுப்பு நிலத்தில் சிக்கி இறந்துள்ளது. 25 முதல் 30 மாடுகள் வரை இறந்திருக்கலாம்’’ என்றார்.