ஐதராபாத்: பாரம்பரியமான ஐதராபாத்  சார்மினார் அருகே  உள்ள ஒரு கட்டிடத்தில்  ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன் நிவாரண உதவியும் அறிவித்துள்ளார்.

 ஐதராபாத் சார்மினார் அருகே  கிருஷ்ணா என்பவரின் 3 மாடி கொண்ட வீட்டில்  இன்று அதிகாலை திடீரென தீ பிடித்து,  தீ மளமளவென பற்றி எரிந்ததில் அந்த விட்டிற்குள் வசித்து வந்த 8 குழந்தைகள் உள்பட  17 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 தீயை அணைக்கும் பணியில் 11 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடமானது, குறுகிய நுழைவு வாயிலை கொண்டதாக இருந்தால், மீட்பு பணிகள் உடடினயாக மேற்கொள்ள முடியாத நிலையில், உயிரிழப்பு அதிகரித்ததாக கூறப்படுகிறது.

தெலுங்கானாவின் ஹைதராபாத்தின் பழைய நகரப் பகுதியில் உள்ள குல்சார் ஹவுஸ் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில்  இன்று அதிகாலை (ஞாயிற்றுக்கிழமை, மே 18, 2025 அன்று)  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அந்த பகுதி மக்கள் பீதியடைந்தனர். இந்த துயர சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் அருகே உள்ள குல்சார் ஹவுஸில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 18, 2025) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பலர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் ஏராளமான நகைக் கடைகள் உள்ளன, மேலும் இது புகழ்பெற்ற சார்மினாருக்கு மிக அருகில் உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர், காலை 6.30 மணியளவில் அவர்களுக்கு ஒரு அழைப்பு வந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், அவர்களை மீட்கம் பணியில் ஈடுபட்டபோது,  பலர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டனர்,  அவர்களை மீட்பு  பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், . வீட்டின் முதல் மாடிக்கு செல்லும் இரண்டு நுழைவாயில்கள், ஒன்று மூடப்பட்ட ஷாப்பிங் இடத்திற்கு செல்லும் அகலமான நுழைவாயில், மிகவும் அதிக உயிரிழப்புக்கு வழிவகுத்தது என கூறியுள்ளார். இந்த தீ விபத்தக்கு  காரணம், மின் பிரச்சினை அதாவது, சாட் சர்க்யூட்டாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குல்சார் ஹவுஸ் பகுதியில் உள்ள தங்கள் கடையின் மேல் பகுதியில் வசித்து வந்ததாக மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்தார். “குடும்ப உறுப்பினர்களை நான் சந்தித்தேன். இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன. நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை, ஆனால் காவல்துறை, நகராட்சி, தீயணைப்பு மற்றும் மின்சாரத் துறைகளை வலுப்படுத்த வேண்டும். இன்று தீயணைப்பு வீரர்களிடம் ஆரம்பத்தில் சரியான உபகரணங்கள் இல்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. வரும் நாட்களில் சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டும். மத்திய அரசு மற்றும் பிரதமரிடம் பேசி, இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி பெற முயற்சிப்பேன்,” என்று அவர் கூறினார்.

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் நிவாரண முயற்சிகளை முடுக்கிவிட்டு காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தெலுங்கானா அமைச்சர் பொன்னம் பிரபாகர், உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மாநில அரசு விரைவில் முழுத் தகவலையும் பகிர்ந்து கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம், தீ விபத்தில் உயிரிழந்ததால் தான் “மிகவும் வேதனையடைந்ததாக” தெரிவித்துள்ளது. “தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் PMNRF இலிருந்து ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என்று PMO X இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.