குவாலியர்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கோழிகள் விற்பனை ஆகாததால் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட அதிக அளவில் வதந்திகள் பரவி வருகிறது.   இதில் கோழிக்கறி மற்றும் முட்டைகள் சாப்பிட்டால் கொரோனா தொற்று ஏற்படும் என்பதும் ஒன்றாகும்.   இதில் உண்மை இல்லை எனினும் பலரும் நம்பியதால் கோழிகள் விற்பனை வீழ்ச்சி அடைந்தது.

நாடெங்கும் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கடும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.  நாமக்கல்லில் நேற்று பண்ணை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.   அப்போது கோழிக்கறியால் கொரோனா பரவும் என்பதை நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்க  தயார் என அறிவிக்கப்பட்டது.

குவாலியர் நகரில் உள்ள கோழிப்பண்ணைகளில் அனைத்தும் கோழிகளும் விற்பனை ஆகாமல் உள்ளன.   அவற்றைச் சந்தையில் இலவச விநியோகம் செய்யப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.   அந்த வீடியோவில் ”இலவசம், இலவசம், எவ்வித நோயும் இல்லை, ஆயினும் இலவசம்” என அறிவிக்கப்படுகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=X0N1xguo5Lo]