அகமதாபாத்
இந்தியக் கடலோரக் காவல் படையினர் குஜராத் பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடி படகில் இருந்து ரூ.400 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை மருந்தைப் பறிமுதல் செய்துள்ளனர்

நேற்று இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் இணைந்து குஜராத் கடல் பகுதியில் சோதனை நடத்தினர் அப்போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அல் ஹுசைனி என்னும் மீன்பிடி படகில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் பாகிஸ்தான் மீன்பிடி படகில் பதுக்கு வைக்கப்பட்டிருந்த 77 கிலோ ஹெராயின் போதை மருந்து பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.400 கோடி ஆகும். இந்த படகில் வந்த 6 பேரைக் கைது செய்த கடலோர காவல் படையினர் போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel