கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால், இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று (10.04.2020) ”கிரிக்கெட் அல்லாத வேறொரு விளையாட்டைச் சார்ந்த ஒருவர் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என நீங்கள் நினைக்கும் நபர் யார்?” என்று ஒரு கேள்வி பதிவிட்டுள்ளார் .

இதற்கு பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன், ” ‘கோவில்’ படத்தில் வரும் புல்லட் பாண்டியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று பதிலளித்துள்ளார் . மேலும் ”திரைப்படங்களில் வரும் மற்ற விளையாட்டைச் சேர்ந்த வீரர்கள் யார் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்” என்று கேள்வி கேட்டிருந்தார்.

அஸ்வினின் இந்தப்கேள்விக்கு ரசிகர்கள் பலரும், ‘வெண்ணிலா கபடிகுழு’ விஷ்ணு விஷால், ‘கில்லி’ விஜய், ‘பிகில்’ விஜய் என்று சீரியஸாகவும், ‘மான்கராத்தே’ சிவகார்த்திகேயன், ‘சின்னகவுண்டர்’ விஜயகாந்த், ‘சென்னை 28’ பிரேம்ஜி என்று கிண்டலாகவும் பதிலளித்துள்ளனர்.

[youtube-feed feed=1]