சென்னை: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து இருந்து அஸ்வதாமன் நீக்கம் செய்யப்படுவதாக இளைஞர் காங்கிரஸ் மாநிலதலைவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் , கட்சியின் கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டதால் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸில் கட்சியின் முதன்மை செயலாளர் மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் கூறி உள்ளார்.
இதுதொடர்பாக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் முதன்மை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து என்.அஸ்வதாமன் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார் என்பதை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துகிறோம். காங்கிரஸ் கட்சியின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராகவும் ,முரணாக செயல்பட்ட காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஒருமைப்பாடு மற்றும் ஒழுக்கத்தை பேணுவதில் உறுதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என அடுத்தடுத்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.