கடந்த அக்டோபர் 4ம் தேதி தனுஷ் நடிப்பில் எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை தழுவி வெளியான அசுரன் படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அசுரன் படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கிலும் கலைப்புலி.எஸ்.தாணு மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளனர்.

இதில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.