கோவை: கோவையில் பேக்கரி உரிமையாளர் ஒருவரை காவல் உதவி ஆய்வாளர் அடித்து இழுத்துச்சென்ற காட்சி வைரலாகி வருகிறது. காவல்துறையினர் அத்துமீறில் கடும் விமர்லசனத்துக்குள்ளாகி உள்ளறது. இதையடுத்து, அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ளதால், தமிழகஅரசு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி, இரவு 11 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவையில் பேக்கரி உரிமையாளர் ஒருவரை உதவி ஆய்வாளர் ஒருவர் தாக்கும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவமானது, கடந்த மார்ச் 29ம் தேதி நடைபெற்றதாகவும், கோவை ஆத்துப்பாலம் பகுதியில் செயல்பட்டு வந்த பேக்கரியை 10.30 மணியளவில் மூடச்சொல்லி, பேக்கரிக்குள் புகுந்து, அதன் உரிமையாளரை உதவி ஆய்வாளர் கணேஷ் தாக்கி, அவரது சட்டையைப் பிடித்து இழுத்துச்சென்றுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமாக செயலை எதிர்த்து, வணிகர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து, அந்த காவல் ஆய்வாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். மாவட்ட காவல்ஆய்வாளர் டேவிட்சன் தேவார்சிதம் அவர்மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலால், சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கோவையில், காவல்துறையினரின் வன்முறை மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.