சென்னை:
டந்த திமுக ஆட்சியின்போது, அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தபோது, நான் தனி ஆளாக வந்து சபையில் பேசினேன். அந்த துணிவு கருணாநிதிக்கு உண்டா? என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.
இன்றைய சபை கூட்டத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்படாத தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கறுப்பு துணியை கட்டி அவைக்கு வந்தனர்.  அவர்கள், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மீதான சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேரவை தலைவரிடம் கேட்டனர்.  அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை ஏற்க சபாநாயகர் 3வது முறையாக மறுத்து விட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தி.மு.க., மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து காவல்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் முதல்வரர் ஜெயலலிதா.
amma
அப்போது பேசிய ஜெயலலிதா,  திமுகவினர் நாள் தோறும் சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை ஊடகங்கள் வழியாக நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். திமுக ஆட்சியை காட்டிலும் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது என்று கூறினார்.
மேலும் இன்று நடைபெற்ற உள்ள காவல்துறை மானியக் கோரிக்கையில் திமுக ஏன் பேசவில்லை. 89 பேர் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் அவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் கட்சித் தலைவரை இடை நீக்கம் செய்யவில்லையே. அவர் வந்திருக்கலாமே? துணிவு இருந்தால் திமுக தலைவர் கருணாநிதி அவைக்கு வந்திருக்க வேண்டும்,  பேசியிருக்க வேண்டும் என்றார்.
வேண்டுமென்றே திமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ஸ்டாலின் கூறுகிறார்.  ஆனால், சஸ்பெண்ட் செய்யப்படாத திமுகவினர், அவைக்கு வந்தார்களே, அவர்கள் விவாதத்தில் பங்கேற்றிருக்கலாமே? என்றார். தி.மு.க.,வினர் செயலுக்காக ஸ்டாலின் சட்டசபையில் மன்னிப்பு கேட்டுள்ளார் .தி.மு.க.,வினர் நடவடிக்கையை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வேண்டுமென்றே சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தி.மு.க.,வினர் கூறுகின்றனர். ஆக்கப்பூர்வ விவாதம் செய்ய தி.மு.க.,வினர் பங்கேற்றிருக்கலாமே? இன்று அவைக்கு வந்த தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது ஏன்?
கடந்த தி.மு.க., ஆட்சியில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, நான் தனியாக வந்து சட்டசபையில் பேசினேன்.  அந்த துணிச்சல் கருணாநிதிக்கு உண்டா? துணிச்சல் இருந்தால் சட்டசபைக்கு வந்து பேசியிருக்க வேண்டும்? சஸ்பெண்ட் செய்யப்படாத இரண்டு  முன்னாள் அமைச்சர்கள் பேசியிருக்கலாமே? தி.மு.க., உறுப்பினர்கள் இன்று பங்கேற்பார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு சீர்கெட்டுள்ளது என்பது பற்றி விவாதிக்கப்படும். அதற்கு பதிலளிக்க முடியாது என்பதால் அவர்கள் பங்கேற்கவில்லை.
சஸ்பெண்ட் செய்யப்படாத தி.மு.க., உறுப்பினர்கள் வந்திருந்தால், கடந்த 2006 – 11 ஆட்சியில் வெட்கக்கேடான சட்டம் ஒழுங்கு சீர்கேடான சம்பவங்களை எடுத்துரைக்கலாம். இதற்கான ஆதாரமாக போட்டோ கொண்டு வந்தேன். ஆனால், இதனை பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
‘               ஸ்டாலின், ஊர் ஊராக, வீதி வீதியாக, வீடு வீடாக சென்று மன்னிப்பு கேட்டார்.. பாட்டு பாடியும், பாட முயற்சி செய்தும் பார்த்தார். ஆனால், 32 வருடங்களுக்கு பிறகு, ஆளும் கட்சியே மீண்டும் தொடர வேண்டும் என மக்கள் விரும்பினர். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும்போது நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே அரசு, பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.
கடந்த  தி.மு.க., ஆட்சியின் போது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
கடந்த 2006ல் மதுரையி்ல் மர்ம நபர் தன்னை தாக்க வந்ததாக ஸ்டாலின் புகார் கூறினார். ஸ்டாலின் தாக்கப்படும் அளவிற்கு தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டு போனதாக தி.மு.க.,வினர் பொய்புகார் கூறி வருகின்றனர்.
தி.மு.க., ஆட்சியை விட அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குறைவு. அ.தி.மு.க., ஆட்சியில், குற்றப்புகார்கள் மீது போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். போலீசாரி்ன் நடவடிக்கையால் அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 2 ஆளில்லா விமானங்கள் மூலம் குற்றச்செயல்கள் கண்காணிக்கப்படுகின்றன.
தி.மு.க., ஆட்சியில் பல அதிகார மையங்கள் இருந்தன. போலீசாரின் நடவடிக்கை யில் குறுக்கீடு இருந்தது. அப்போது பலரது சொத்துக்கள் அவர்கள் கடத்தி செல்லப்பட்டும், மிரட்டியும் வாங்கப்பட்டன. இதனால், தி.மு.க., ஆட்சியில் 1615 நிலமோசடி தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன எனக்கூறினார்.