புதுச்சேரி

புதுச்சேரி முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கப் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு உரிமை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.   பாஜக ஆட்சி செய்யாத பல மாநிலங்களில் இந்த சட்டத்துக்கு எதிராக திர்மானங்க்ள் நிறைவேற்றப்பட்டுள்ளன.   அவ்வகையில் புதுச்சேரி சட்டப்பேரவை நாளை கூடி இந்த சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் இயற்ற உள்ளது.  புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி முதல்வர் நாராயணசாமிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில்,”மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மூன்று புதுச்சேரி சட்டப்ப்பேர்வை உறுப்பினர்கள் என்னை 10 ஆம் தேதி அன்று சந்தித்ஹ்டனர்.  அப்போது அவர்கள் இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக வரும் 12 ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற உள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் இது குறித்து புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகரிடம் இவ்வாறு தீர்மானம் இயற்றுவது சட்டப்பேரவையின் அதிகாரத்தை மீறிய செயல் என்பதால் அதைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தனர்.

குடியுரிமை சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு அதன் பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.    தற்போது அது சட்டமாக்கப்பட்டு கட்ந்த 2019 டிசம்பர் மாதம் 12 ஆம் தேதியிட்ட அரசாணை 71 ல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைக்குக் குடியுரிமை குறித்த எவ்வித முடிவு எடுக்கவும் உரிமை கிடையாது.   எனவே அந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் இயற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை.  மேலும் இது தற்போது சட்டமாகி உள்ளதால் இதை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற முடியாது.: என குறிப்பிட்டுள்ளார்.