சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழ்நாடு வருகை தருகிறார்.

தலைமை தேர்தல் ஆணையரின் குழு பிப். முதல் வாரத்தில் தமிழகம் வருகை தர உள்ளது. இந்த வருகையின்போது, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர வாக்காளர் திருத்தம் பணி கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இடையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், பெயர் விடுபட்டவர்கள் சேர்க்க கால அவகாசம் டிசம்பர் 30ந்தேதியுடன் முடிவடைகிறது.
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். மூலம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 15,74,351 பேர் படிவம் 6-ஐ விண்ணப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்து 96,732 பேர் படிவம் 7-ஐ விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் குழு தமிழ்நாடு வருகை தர உள்ளது. இரு நாட்கள் தமிழ்நாட்டில் முகாமிடும் அதிகாரிகள், பல்வேறு பணிகள் குறித்து வருமான வரித்துறை, சி.ஆர்.பி.ஏஃப். உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் காட்சிகள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் குழு வருவதற்கு முன், துணை தேர்தல் ஆணையர்கள் தமிழ்நாடு வந்து ஆய்வு செய்ய உள்ளனர்.
[youtube-feed feed=1]