சென்னை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார்.

இன்று தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை மாநிலத் தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு வெளியிட்டார்.   தமிழகத்தில் மொத்தம் 6.1 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.  இதில் ஆண்கள் 3.01 கோடி பேரும் பெண்கள் 3.09 கோடியும் உள்ளனர்.  மூனேம்பாலினத்தவர் 6,385 பேர் உள்ளனர்.

இதையொட்டி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரை வாக்காளர் பட்டியலைச் சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார். தற்போது சென்னையில் மொத்தம் 39,40,704 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 19,39,694 பேரும் பெண்கள் 19,99,995பேரும் மூன்றாம் பாலினத்தவர் 1,015 பேரும் உள்ளனர்.

அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3,06,189 பேர் உள்ளனர்.   இதில் ஆண்கள் 1,51,535 பேர், பெண்கள் 1,54,571 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 83 பேர் உள்ளனர்.

குறைந்த பட்சமாகத் துறைமுகம் தொகுதியில் 1,73.481 பேர் உள்ளனர்.  இதில் 90,335 ஆண்கள், 83,094 பெண்கள் மற்றும் 52 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர்.