ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம் என்று மேடைக்கு மேடை பிரதமர் நரேந்திர மோடி முழங்கி வரும் நிலையில் அசாம் மாநில பாஜக கூட்டணி கட்சி நிர்வாகி 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் கட்டிலில் புரளும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் போரோ தலைமையிலான யுபிபிஎல் கட்சி நிர்வாகி பெஞ்சமின் பாசுமாதாரியின் இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உட்ல்குரி மாவட்டத்தில் உள்ள பைரகுரி பகுதியைச் சேர்ந்த UPPL கட்சி நிர்வாகி பெஞ்சமின் பாசுமாதாரி ரூ.500 கரன்சி நோட்டுகளை அடுக்கி வைத்து தூங்கிக் கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம் ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம் என்று முழங்கி வரும் மோடிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]