திஸ்புர்: அஸ்ஸாம் மாநித்தில் நேற்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், பாஜக வேட்பாளர் ஒருவரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கம் மற்றும் அசாமில் நேற்று 2 வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளில் 26 பெண்கள் உள்பட 245 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். இதற்கிடையில் வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே அங்குள்ள பாத்தர்கண்டி தொகுதி பாஜக எம்.எல்.ஏ., கிருஷ்ணேந்து பாலின் காரில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரது மகேந்திரா வெள்ளை நிற ஜீப்பிற்குள் வாக்குப்பதிவு இயந்திரம் இருப்பதாகவும், அம்மாநில பத்திரிக்கையாளர் அதனு பூயான் டிவீட் செய்திருந்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான வீடியோவும் வைரலபாகி வருகிறது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்த குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி தேர்தலை புறக்கணிப்பதாகவும் எச்சரித்துள்ளது.