குவஹாத்தி: ‘இந்தியாவில் வன விலங்குகளுக்கான சிறந்த வாழிடம்’ என்ற விருதை, அஸ்ஸாம் மாநிலம் பெற்றுள்ளது.
சமீபத்தில் லோன்லி பிளானெட் மேகஸின் இந்தியாவால் நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில் இந்த விருதைப் பெற்றது அஸ்ஸாம்.
அம்மாநிலத்தில் உள்ள காண்டாமிருகங்களுக்குப் புகழ்பெற்ற காசிராங்கோ சரணாலயம், புலிகள், காண்டாமிருகங்கள், யானைகள் மற்றும் நீர் யானைகள் வாழும் மனாஸ் சரணாலயத்தின் புல்வெளி, நமேரி சரணாலயத்தின் பறவைக் காட்சி போன்றவை அந்த விருதிற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுதவிர, காட்டுக் குதிரைகளுக்கு பெயர்பெற்ற திப்ரு – சாய்கோவா சரணாலயமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே வில்லோ மரங்கள் புகழ்பெற்றவை. மேலும், குட்டி காசிராங்கோ என அழைக்கப்படும் ஆரஞ்ச் சரணாலயமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விருதுகள் 8ம் ஆண்டாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.