ஷில்லாங்: அஸ்ஸாம் மிசோரம் மாநில எல்லை பிரச்சினை தொடர்பாக, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  இரு மாநில காவலர்களிடையே ஏற்பட்ட மோதலில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 போலீசார் பலியாகி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. அசாம் மாநிலத்தின் எல்லையான கொலாசிப் மாவட்டம் மற்றும் மிசோரம் மாநில எல்லையான சச்சார் மாவட்டத்தில் அவ்வப்போது மோதல்கள் நிகழ்கின்றன.  கடந்த ஜூன் மாதம் முதல் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. தங்கள் மாநிலத்துக்குட்பட்ட  பகுதியில் அசாம் போலீசார் முகாம் அமைத்து தங்கியுள்ளதாகவும் மிசோரம் போலீசாரும்,  சர்ச்சைக்குரிய நிலப்பரப்பை மிசோரமைச் சேர்ந்த மக்கள் ஆக்கிரமித்துள்ளதாக அசாம் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக இருமாநில எல்லைகளிலும் பதற்றம் நிலவு வருகிறது.

இந்த நிலையில், இருமாநில எல்லையில் உள்ள விவசாயிகள்  குடிசைகளுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் மோதல் ஏற்பட்டது.  அரசு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து துப்பாக்கி சூடும் நடந்துள்ளது.

து இந்த மோதலில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 போலீசார் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் சில்சார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்த மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறி உள்ளார்.

முன்னதாக கடந்தவாரம், இரு மாநில முதல்வர்களையும் அழைத்து, ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய நிலையில், வன்முறை ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.

மத்தியஅரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து,  பிரச்சனைக்குரிய பகுதியில் இருந்து இரு மாநில போலீஸ் படைகளும் திரும்பிச் சென்றுள்ளன.