அசாம் வெள்ளப்பாதிப்பு காரணமாக 3 பேர் பலி; 57000 பேர் பாதிப்பு! பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்…

Must read

திஸ்புர்: அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை நிலச்சரிவில் 3 பேர் பலி உள்ளதாகவும  57,000 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மாநிலஅரசு அறிவித்து உள்ளது.

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  தொடர் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதுடன்,. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், 57ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளப் பாதிப்பில், 15 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 222 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 1,0321 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர் என மாநில அரசு தெரிவித்து உள்ளது.

மேலும், லக்கிம்பூர் மற்றும் நாகோன் மாவட்டங்களில் பல சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் சேதமடைந்து உள்ளதாகவும்,  நகோன், நல்பாரி உள்பட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மேடான பகுதிகளிலிருந்து சரிந்த பாறைகள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் ரயில் இணைப்பு பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 10321.44 ஹெக்டர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு அசாமில் நிலச்சரிவில் சிக்கி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் ரயில் இணைப்பு பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 10321.44 ஹெக்டர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாகவும்,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், துணை ராணுவப் படைகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் மீட்பு படையினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

டிடோக்செரா ரெயில் நிலையத்தில் சிக்கித் தவித்த சுமார் 1,245 பயணிகள் பதர்பூர் மற்றும் சில்சார் வரை கொண்டு வரப்பட்டுள்ளனர்.  119 பயணிகள் விமானப்படை விமானம் மூலம் அனுப்பப்பட்டதாக ரயில்வேத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

More articles

Latest article