கௌகாத்தி,
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஹிமா தாஸ் தனது ஊதியத்தில் பாதியை அசாம் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஹிமா தாஸ் சென்ற வருடம் ஜூலை மாதம் நடந்த சர்வதேச தடகள போட்டிகளில் கலந்துக் கொண்டார் அவர் பெண்கள் 400 மீடர் ஓட்டப்பந்தய இறுதிச் சுற்றில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்தார்.
அவர் தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பணி புரிந்து வருகிறார். அத்துடன் பல சமூக சேவைகள் செய்து வருகிறார். ஹிமா தாஸ் வசிக்கும் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை அதிகம் நடந்து வந்தது. ஹிமா தாஸ் ஒரு மாநிலக் கட்சியின் விளையாட்டுப் பிரிவு செயலராக உள்ளார். அவர் தனத் கட்சியின் சார்பில் கள்ளச்சாராயத்தை எதிர்த்து போராடி உள்ளார்.
சமீபத்தில் அசாமில் வெள்ளப் பெருக்கால் லட்சக்கணக்கானோர் குடியிருப்பை இழந்தனர். குறிப்பாக காசிரங்கா பகுதியில் உள்ள தேசிய பூங்கா முழுவதுமாக பாதிப்ப அடைந்தது. அங்கு வசித்த 15 பேர் வெள்ள பாதிப்பால் மரணம் அடைந்தனர். இது ஹிமா தாஸ் மனதைப் பெரிதும் பாதித்தது. அதையொட்டி அவர் தனது ஊதியத்தில் பாதியை நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்.
இது குறித்து ஹிமா தாஸ் தனது டிவிட்டரில், “நமது அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் பாதிப்பு அடைந்துள்ளன. நான் எனது ஊதியத்தில் பாதியை நன்கொடையாக அளித்துள்ளேன். தற்போது அசாம் மாநிலம் இந்த பாதிபில் இருந்து மீள வேண்டிய நிலையில் உள்ளது. எனவே பெரிய நிறுவனங்களும் பொதுமக்களும் மாநில நலனுக்கு உதவ முன் வர வேண்டும்.” என பதிந்துள்ளார்.