ஐதராபாத்: நாடாளுமன்ற தேர்தல் தேதிகள், முஸ்லீம்களின் ரம்ஜான் நோன்பு மாதத்தில் குறுக்கிடுவதற்கு பலரும் தங்களின் ஏமாற்றத்தை தெரிவித்திருக்கும் வேளையில், அதை வரவேற்றுள்ளார் அசாதுதீன் ஓவைசி.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் தவைராக இருக்கும் ஓவைசி, இதுகுறித்து கூறியுள்ளதாவது, “தேர்தல் என்பது ஒரு நீண்ட செயல்முறை. நாங்கள் ரம்ஜான் நோன்பிருந்தாலும் கட்டாயம் வாக்களிப்போம்.

இந்த ரம்ஜான் மாதத்தில், முஸ்லீம்கள் வாக்களிக்கும் விகிதம் அதிகரிக்கும். தீய சக்திகளை இந்த தேர்தலில் தோற்கடிப்போம். ரம்ஜான் மாதத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்ற வாதம் ஒரு குப்பையான வாதமாகும். இப்படியான கருத்தை தெரிவிப்பவர்கள் இஸ்லாமை புரிந்துகொள்ளாதவர்கள்” என்றார்.

நாடாளுமன்றத்தின் கடைசி மூன்றுகட்ட (6, 7, மற்றும் 8) தேர்தல்கள், ரம்ஜான் மாதத்தில் வருகின்றன மற்றும் அதன்பொருட்டு பல முஸ்லீம் குருமார்கள் அதிருப்தி தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி