மும்பை
இந்தியாவின் மிகப் பெரிய பெயிண்ட் நிறுவனமான ஏசியன் பெயிண்ட் தனது ஊழியர்களின் மன உறுதியை மேம்படுத்த ஊதிய உயர்வு வழங்கி உள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பெயிண்ட் நிறுவனமான ஏசியன் பெயிண்ட் நிறுவனம் கொரோனா எதிர்ப்புக்குத் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.35 கோடி நிதியுதவி அளித்துள்ளது. அத்துடன் கொரோனா பரவுவதை தடுக்க தனது பங்காக சானிடைசர்க்ள் தயாரித்து வழங்குகிறது.
மத்திய ரசாயன அமைச்சகம் நாட்டில் தற்போது சானிடைசர்க்ள் தேவை அதிக அளவில் உள்ளதால் அதை உற்பத்தி செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தது அதன் அடிப்படையில் ஏசியன் பெயிண்ட் நிறுவனம் கை மற்றும் தரைக்கான சுத்திகரிப்பானை தயாரித்து வருகிறது ஏற்கனவே இந்த நிறுவனம் ஆஸ்துமா நோயாளிகளுக்காக ராயல் ஹெல்த் ஷீல்ட் என்னும் பெயிண்டை தயாரித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக கடன் இல்லாமல் இயங்கி வரும் இந்த நிறுவனம் அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு பொருளாதார சரிவு அதிகரிக்கும் என்பதால் தனது பங்குதாரர்களுக்கான ஈவுத் தொகையை மார்ச் மாதமே அளித்து சாதனை புரிந்தது தற்போது இந்த நிறுவனத்தின் வர்த்தகம் நன்கு உள்ளதால் பங்குதாரர்களுக்கு அதிக அளவில் ஈவுத் தொகை கிடைத்துள்ளது.
தற்போது ஊரடங்கு மற்றும் கொரோனா பாதிப்பால் பல நிறுவனங்கள் ஊதியக் குறைப்பு மற்றும் பணி நீக்கம் போன்றவற்றை செய்து வருகிறது. அதற்கு மறாக ஏசியன் பெயிண்ட் நிறுவனம் ஊழியர்களின் மன உறுதியை மேம்படுத்த ஊதிய உயர்வு வழங்கி உள்ளது. அத்துடன் ஊழியர்களுக்கு மருத்துவமனை செலவு உள்ளிட்டவற்றுக்காகக் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.