அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து லாஸ்வில்லாவுக்கு பறந்து கொண்டிருந்தது யுனைட்டட் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான அந்த விமானம். யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் இருவர் அதே விமானத்தில் பயணிக்க ஏறி உள்ளனர். ஆனால், ஏற்கனவே உரிய இருக்கைகளுக்கு பயணிகள் புக் செய்யப்பட்டிருந்ததால் விமானத்தில் இடமில்லை.

இதனால் விமான நிறுவன அதிகாரிகளுக்கு இடம் கொடுத்து யாரேனும் இருவர் தாமாக முன்வந்து இறங்கிக் கொள்ளுமாறும், அதற்கான சலுகைகள் அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் விமான பணியாளர்கள் பயணிகளிடம் கேட்டுள்ளனர். ஆனால், யாரும் தாமாக இடமளிக்க முன்வரவில்லை.

இதனால், அதில் பயணித்த ஆசிய மருத்துவர் ஒருவரை விமானப் பணியாளர்கள் இருக்கையில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று விமானத்தில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். இந்தக் காட்சியை விமானத்தில் இருந்த பயணி ஒருவர் ஃபேஸ்புக்கில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், விமானத்தின் இருக்கையில் இருந்து ஆசிய மருத்துவர் ஒருவர் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படுவதும், அவர் சத்தமிட்டு அலறுவதும், பின்னாலேயே அவரது மனைவி அலறி அடித்து ஓடும் காட்சியும் பதிவாகி இருக்கிறது. விமான நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு பயணிகள் யாரும் தாமாகவே முன்வந்து இருக்கையைக் காலி செய்து இடம் தர முன்வராத நிலையில், அங்கிருந்து விமானப் பணியாளர்களே ஆசிய மருத்துவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இதுதான் அமெரிக்க நாகரிகம். பார்த்துக் கொள்ளுங்கள்.

https://www.facebook.com/audra.dickerson/videos/10104378182069960/