துபாய்:
சிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் 52 கிலோ இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான அமித் பங்கல் முன்னேறியுள்ளார்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது.

இன்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் சாகன் பிபோசினோவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அமித் பங்கல் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

நேற்று நடந்த பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில், 6 முறை உலக சாம்பியனான இந்தியாவின் மேரிகோம் 4-1 என்ற கணக்கில் மங்கோலியா வீராங்கனை லுத்சாய்கான் அல்டான்ட்செட்செக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதேபோல் 54 கிலோ பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் டினா ஜோலாமானை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.