தோஹா

ஆசியன் சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டிகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கம் வென்று வருகின்றனர்.

 

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் இதுவரை பல விளையாட்டுக்களில் தொடர்ந்து பதக்கம் வென்று வருகின்றனர். அவ்வரிசையில் இன்றுகுத்துச் சண்டை போட்டி நடந்தது. இதிலும் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் அதக்கங்கள் பெற்றுள்ளர்.

ஆடவருக்கான 52 கிலோ குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் அமித் பங்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்த வருடத்தின் இவர் வென்ற இரண்டாம் தங்கபாதக்கமாகும். கடந்த பிப்ரவரி மாதம் பல்கேரியாவில் நடந்த ஸ்டிரான்ஜா நினைவுப் போட்டியில் ஏற்கனவே இவர் தங்கம் வென்றுள்ளார். இவர் சென்ற வருடம் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.

பெண்களுக்கான 85 கிலோ போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த பதக்கத்தை வென்ற முதல் இந்தியப்பெண் பூஜா ராணி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2012 ஆம் வருடம் இதே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். தற்போது 28 வயதாகும் இவர் இம்முறை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இவர்களை தவிர ஆடவருக்கான குத்துச் சண்டை போட்டியில் தீபக் சிங் (49 கிலோ), அவிந்தர் சிங்(75 கிலோ), மற்றும் ஆஷிஷ் குமார் (75 கிலோ) ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளனர். இன்றைய போட்டிகளில் இந்தியா 2 தங்கம், நான்கு வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் என 13 பதக்கங்கள் பெற்றுள்ளன.

இன்னொரு சாதனையாக ஒரே நாளில் இந்தியர்களில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் தங்கம் வென்றதும் இது முதல் தடவையாகும்.