மும்பை:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வாரம் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை நடக்க உள்ளது.
இந்தாண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இலங்கையில் தற்போதும் அசாதரான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் ஆசிய கோப்பை கிரிக்கெட், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel