சிட்னி: எனது கேரியரிலேயே ரவிச்சந்திரன் அஸ்வினைப் போன்ற ஒரு தொல்லை தரும் பந்துவீச்சாளரை நான் கண்டதில்லை என்று புலம்பியுள்ளார் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்.
டெஸ்ட் கிரிக்கெட் ஐசிசி பேட்டிங் தரவரிசையில், உலகின் நம்பர் -1 இடத்தில் இருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். ஆனால், தற்போது இந்தியாவுக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டிகளில், மோசமாக சொதப்பி வருகிறார்.
இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில், 2 சதங்களை அடித்த ஸ்மித், டெஸ்ட் தொடரில் ஒரு கை பார்ப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
அவர் கூறியுள்ளதாவது, “இந்தியாவின் அஸ்வினுக்கு எனது பேட்டிங்கின் மூலமாக அழுத்தம் தர விரும்பினேன். ஆனால், பதிலாக அவர் எனக்கு அழுத்தம் தந்து வருகிறார். எனது இத்தனையாண்டு டெஸ்ட் கேரியரில், அவரைப் போன்ற ஒரு சவாலான பெளலரை நான் கண்டதில்லை.
சுழற்பந்து வீச்சு என்பது எனக்கு ஏதுவான அம்சமே. அதை எதிர்கொள்வதில் நான் ஆக்ரோஷம் காட்டுவேன். ஆனால், அஸ்வின் விஷயத்தில் எதுவும் கதைக்காகவில்லை.
அவரின் பந்துவீச்சு இரண்டு முனைகளிலும் இருந்து கத்தி வருவது போல் உள்ளது. இதனால், எனது விக்கெட்டை இழந்து விடுகிறேன். ஆனாலும், வரும் நாட்களில் அவரின் பந்துவீச்சை சமாளித்து ஆட முடியும் என்று நம்புகிறேன்” என்றுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.