ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில் அனைத்து தொகுதிகளிலும் தாமே போட்டியிடுமாறு நினைத்துக் கொள்ளுமாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

வரும் 25 ஆம் தேதி அன்று ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியைத் தக்க வைக்க, காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைப் பிடிக்க  பா.ஜ.க வும் கடும் போட்டியில் உள்ளன  அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் ,

ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் 200 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் 150 இடங்களில் பிரசாரத்திற்கு வரும்படி என்னிடம் கேட்டு கொண்டனர்.

என்னால், பிரசாரத்திற்கு எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாது. ஆகவே இந்த அனைத்து இடங்களிலும் நானே போட்டியிடுகிறேன் என நினைத்துக் கொள்ளுங்கள்.

தற்போதைய அரசைத் தொடரச் செய்ய வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சட்டசபைத்  தேர்தலில் உள்ளூர் அளவில் யார் போட்டியிடுகிறார்கள் என்று நீங்கள் பார்க்க வேண்டியதில்லை.”

என்று கூறி உள்ளார்.