டில்லி

குடியரசு தினத்தன்று மறைந்த ராணுவ வீரர் ஜோதி பிரகாஷ் நிராலாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு வருடமும்  குடியரசு தினத்தை முன்னிட்டு தீரச்செயல் புரிந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோருக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கி கௌரவிப்பது வழக்கம்.    அந்த வகையில் அமர்நாத் யாத்திரிகர்களை தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய பேருந்து ஓட்டுனருக்கு ஜீவன் ரக்‌ஷா பதக் வழங்கப்பட்டுள்ளது.  தற்போது ராணுவ வீரர்களுக்கான விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

ராணுவ வீரர்களுக்கான உயரிய விருதான அசோக் சக்ரா மறைந்த வீரர் ஜோதி பிரகாஷ் நிராலாவுக்கு வழங்கப்பட உள்ளது.   கடந்த வருடம் நவம்பர் மாதம் 18ஆம் தேதி தனி ஒருவராக லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகளின் முகாமை நிராலா அழித்துள்ளார்.   அவருடைய இந்த தாக்குதலில் ஆறு பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர்.    அப்போது பயங்கரவாதிகளில் இருந்து ஒருவர் சுட்டதில் குண்டு தாக்கி நிராலா மரணம் அடைந்தார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜோதி பிரகாஷ் நிராலா திருமணமானவர்.  இவருக்கு நான்கு வயதில் ஒரு மகள் இருக்கிறார்.