மான்செஸ்டர்

கடும் காற்று வீச்சால் விக்கட்டுகள் மீது  வைக்கப்படும் பைல்கள் (BAILS) இல்லாமல் ஆஷஸ் கிரிக்கட் போட்டி நடந்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் பந்தயம் கடந்த 1882 ஆம் ஆண்டு முதல்  தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.   அப்போது முதல் இப்போது வரை மொத்தம் 70 தொடர்கள் நடந்துள்ளன.  அவற்றில் ஆஸ்திரேலியா 33 பந்தயங்களிலும் இங்கிலாந்து 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.    ஐந்து போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி முடிந்துள்ளன.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டிகள் தற்போது நடந்து  வருகின்றன.  இந்தப் போட்டிகளில் தற்போது மான்செஸ்டரில் மூன்றாவது டெஸ்ட் பந்தயம் நடந்து வருகிறது. கிரிக்கெட் போட்டிகளில் மூன்று விக்கட்டுகள் நடப்பட்டு அந்த விக்கட்டுகளின் மேல் பகுதியில் உள்ள இடைவெளியில் பைல்கள் என அழைக்கப்படும் கட்டைகள் பொருத்தப்படுவது வழக்கமாகும்

மான்செஸ்டரில் தற்போது காற்று கடுமையாக வீசி வருகிறது.   எனவே இந்த போட்டிகளின் போது பல முறை விக்கட்டுகளின் மீது வைக்கப்பட்டுள்ள பைல்கள் காற்றில்  பறந்து விழத் தொடங்கின.   இதனால் கிரிக்கெட் நடுவர்கள் மிகவும் எரிச்சல் அடைந்தனர்.   அதையொட்டி பைல்கள் இல்லாமலே டெஸ்ட் பந்தயத்தை தொடர நடுவர்கள் உத்தரவிட்டனர்/.

சர்வதேச கிரிக்கெட் விதி எண் 8.5 இன்படி ”தேவைப்படும்  போது விக்கட்டுகள் மீதுள்ள பைல்களை நீக்க நடுவருக்கு உரிமை உண்டு.   அவ்வாறு நீக்கும் போது இருபக்கங்களில் உள்ள விக்கட்டுகளில் இருந்தும் பைல்களை நீக்க வேண்டும்    அதைப் போல் நிலை சரியாகும் போது மீண்டும் பைல்களை பயன்படுத்திக் கொள்ளலாம் ” என உள்ளது.

அதன்படி இந்த  மூன்றாவது டெஸ்ட் பந்தயம் பைல்கள் இல்லாத விக்கட்டுகளுடன் நடந்தது.

ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் பந்தயத்தில் கடும் காற்று  காரணமாக பைல்கள் இல்லாத விக்கட்டுகளுடன் பந்தயம் நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.