‘த்ரிஷ்யம்’, ‘தூங்காவனம்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் ஆஷா சரத்.
‘கெட்டா’ என்கிற திரைப்படத்திலும் ஆஷா சரத் நடிக்கிறார். இதில் அவரது மகள் கதாபாத்திரத்தில், நிஜத்தில் அவரது மகளான உத்ராவே நடிக்கிறார். இது அவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள அரசின் மாநில விருதினை இரண்டு முறை வென்ற இயக்குநர் மனோஜ் கானா, ‘கெட்டா’ படத்தை இயக்குகிறார். சமூகப் பிரச்சினையைப் பேசும் தீவிரமான கதை இது.