பஞ்சகுலா
கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் அசீமானந்தா உள்ளிட்ட நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹரியானா மாநிலம் பானிபட் அருகே சம்ஜோதா ரெயிலில் குண்டு வெடித்ததில் 68 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் உயிரிழந்தன்ர். இந்த வழக்கு பஞ்சகுலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் ஆர் எஸ் எஸ் பிரமுகர் அசீமானந்தா உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பஞ்சகுலா சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஏற்கனவே இருமுறை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
நேற்றைய தீர்ப்பில் சிறப்பு நீதிபதி அசீமானந்தா, லோகேஷ் சவுத்ரி, கமல் சவுகான் மற்றும் ராஜிந்தர் சவுத்ரி ஆகியோரை விடுவித்துள்ளார். அசீமானந்தா மீது ஏற்கனவே பயங்கரவாத செயல்கள் புரிந்துள்ளதாக வழக்குகள் இருந்து அதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மீதி இருந்த ஒரே வழக்கான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்தும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
[youtube-feed feed=1]