ஜெய்ப்பூர்:
பாலியல் பலாத்கார சாமியார் ஆஸரம் பாபு மீதான வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆஸரம் பாபு சாமியார் மீதான வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்தது வருகிறது. இதன் மீதான விசாரணை முடிந்து வரும் 25ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 25ம் தேதி ஜோத்பூர் சிறை வளாகத்தின் உள்ளேயே தீர்ப்பு கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜோத்பூர் போலீசார் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். பொது இடங்களில் 4 பேர் ஒன்றாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவை சாமியாரின் ஆதரவாளர்கள் தீர்ப்பளித்த பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலான செயல்களில் ஈடுபடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.