ப்ஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பு மருந்து விலை குறைப்பால் உற்பத்தியாளர்கள் கலக்கம்

Must read

நியூயார்க்

மெரிக்காவின் ப்ஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பு மருந்து விலை 20 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அனைத்து உற்பத்தியாளர்களும் அதே விலையில் அளிக்க வேண்டி உள்ளது.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள பிரபல மருந்து உற்பத்தியாளரான ப்ஃபிஸர் கொரோனா தடுப்பு மருந்தை ஜெர்மனியின் பயோஎன்டெக் என்னும் நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ளது.  இவ்வாறு நான்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது  சோதனை நிலையில் உள்ளது   இந்த தடுப்பு மருந்துகளை விற்க அமெரிக்க அரசுடன் ப்ஃபிஸர் நிறுவனம் ஒப்பந்தம் இட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி இந்த மருந்து 10 கோடி டோஸ் அளிக்கப்பட உள்ளது.  இந்த மருந்து ஒரு டோசுக்கு சுமார் 20  டாலர் என விலைக்கு அளிக்கப்பட உள்ளது.    இந்த மருந்து இரு டோஸ்களாக அளிக்கப்பட உள்ளது.  இதன் மொத்த விலை சுமார் 40 டாலராக உள்ள நிலையில் இது மற்ற தடுப்பு மருந்துகளை விட 30% குறைவு என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து வரும் மற்ற தயாரிப்பாளர்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.  தற்போதைய நிலையில் மற்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் மருந்து ப்ஃபிஸர் நிறுவன மருந்தை விட மிகவும் வீரியம் உள்ளதாக இருந்தால் மட்டுமே விலையை அதிகரிக்க முடியும்.  அதே அளவு சக்தி கொண்ட மருந்து என்றால் அதை இதே விலைக்கு அளிக்க வேண்டிய நிலைக்கு மற்ற நிறுவனங்கள் உள்ளன.

More articles

Latest article