சென்னை

ன்று வெளியிடப்பட்டுள்ள தமிழக வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6,10,44,358 பேர் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இன்று தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யப்ரதா சாகு தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.  இந்த பட்டியலின் படி மொத்தம் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர்.  இதில் ஆண்கள் 3,01,12,370 பேரும், பெண்கள் 3,09,25,603 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 6,385 பேரும் உள்ளனர்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி  சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிக அளவு வாக்காளர் உள்ளனர்.   இங்கு மொத்தம் 6,55,366 பேர் உள்ளனர். குறைந்த அளவு வாக்காளர் உள்ள தொகுதி கீழ்வேலூர் ஆகும். இங்கு 1,73,107 பேர் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் மாற்றம் கோருவோருக்காக நவம்பர் 21 மற்றும் 22, டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.  இந்த முகாம் அந்தந்த பகுதி வாக்குப்பதிவு மையங்களில் நடைபெறும்.  இங்குப் பெயர் சேர்க்கை, நீக்கம், பெயர் மாற்றம் மற்றும் விலாச மாற்றங்களைச் செய்துக் கொள்ளலாம்.