திருவனந்தபுரம்

மிழக முதல்வர் வேண்டுகோளுக்கிணங்க கேரள அரசு நாளைய விடுமுறையை ரத்து செய்து இன்றே பொங்கல் விடுமுறை அளித்துள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் கடந்த சில வருடங்களாகத் தமிழர்கள் அதிகம் வசிக்கும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.  ஆனால், கேரளாவில் நாளை (15ம் தேதி) பொங்கலுக்கு அரசு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையொட்டி நேற்று தமிழக முதல்வர் கேரள முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் உலகெங்கும் 14 ஆம் தேதி  கொண்டாடப்படுகிறது எனவும் அதனால் கேரள அரசு பொங்கல் விடுமுறை தினத்தை  இன்று அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார். அதை ஏற்ற கேரள அரசு நாளைய விடுமுறையை ரத்து செய்து இன்று பொங்கல் விடுமுறை என அறிவித்துள்ளது.