டெல்லி: உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து  இளநிலை மருத்துவ படிப்புகான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வு முடிவுகள்,  தோ்வு மையவாரியாகவும், நகரங்கள் வாரியாகவும்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள்   neet.ntaonline.in இல்  வெளியிடப்பட்டுள்ளது,  மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை இங்கே சரிபார்க்கலாம்.

 

நீட் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு சர்ச்சைகள் மற்றும் அதன்மீதான வழக்குகளைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம்,  நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகர வாரியாக சனிக்கிழமை (ஜூலை 20) பகல் 12 மணிக்குள் வெளியிட  தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ)  உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து நீதிமன்ற த்தரவு இன்று மதியம்   நீட்  தேர்வு முடிவுகள் மீண்டும்  வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்வு மையம் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.

ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறார்களா என்பதை ஆராயும் வகையில் நகர மற்றும் தேர்வு மையவாரியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு, ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்களில் அதிகம் பேர், அதிக மதிப்பெண் எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது தொடர்பான முறையில் விசாரணையை கொண்டு செல்லும் வகையில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகான கலந்தாய்வு இன்னும் தொடங்காத நிலையில், இன்று தேர்வு முடிவுகள் மீண்டும் வெளியிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து நீட் வழக்கு மீண்டும் வரும் 22ஆம் தேதி  (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரவிருக்கிறது. அன்றைய தினம் விசாரணையைத் தொடர்ந்து கலந்தாய்வு எப்போது நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.