டில்லி:
289 எம்.பி., எம்எல்ஏ.க்களின் சொத்துக்கள் அவர்களது பதவி காலத்தில் அதிகரித்திருப்பது குறித்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பட்டியலில் பல மூத்த தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர். அதோடு அனைத்து கட்சி எம்பி மற்றும் எம்எல்ஏ.க்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளது. இதில் சிலரது சொத்து விபரங்கள் 5 ஆண்டுகளில் 500 மடங்கு உயர்ந்துள்ளது.
சொத்துக்கள் அபரிமிதமாக உயர்வது சர்ச்சைக்குறியதாகும். ஆனால் சொத்துக்களின் மதிப்பும், தொழில்கள் மீதான முதலீடும் அதிகரிப்பதும் இயல்பு என்று எம்பி, எம்எல்ஏ.க்கள் கூறுகின்றனர்.
ஆனால், இதை உச்சநீதிமன்றம் விடுவதாக இல்லை. இந்த சொத்து மதிப்பு உயர்வு அனைத்தும் சட்டரீதியிலானதா? என்பதை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.