இஸ்லாமியர் வாக்களிக்காததால் சிறுபான்மையினர் பிரிவைக் கலைக்கும் அசாம் பாஜக

Must read

வுகாத்தி

ஸ்லாமியர்கள் தங்களுக்கு வாக்களிக்காததால் அசாம் மாநில பாஜக தனது சிறுபான்மை பிரிவைக் கலைக்க உள்ளது.

நடந்து முடிந்த அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் இந்த கூட்டணி 75 தொகுதிகளைக் கைப்பற்றி அரசு அமைக்க உள்ளது.  இதில் பாஜக மட்டுமே 60 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.   காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 50 இடங்கள் கிடைத்துள்ளன.

அசாமில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள 31-34 தொகுதிகள் உள்ளன அவற்றில் சென்ற தேர்தலில் பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.  அங்கு வெற்றி பெற்ற அனிமுல் ஹக் லஸ்கர் சட்டப்பேரவை துணைச் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்  இம்முறை அவருடன் மேலும் 8 இஸ்லாமியர்கள் தேர்தலில் களம் இறங்கினர்.  இவர்கள் அனைவரும் தோல்வி அடைந்துள்ளனர்.

இவர்களில் லஸ்கர் 19,654 வாக்குகள் வித்தியாசத்தில் அனைத்திந்திய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் கரிமுதீன் பார்புய்யாவிடம் தோல்வி அடைந்தார்.   பாஜக மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளின் இஸ்லாமிய வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர்.  இந்த தேர்தலில் வெற்றி பெற்ற 31 பேரில் 16 பேர் காங்கிரஸ் கட்சி மற்றும் 15 பேர் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.   இதனால் பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாக்களிக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.  இந்நிலையில் அசாம் மாநில பாஜக தலைவர் ரஞ்சித் தாஸ் அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவைக் காலம் குறிப்பிடாமல் சில நாட்களுக்குக் கலைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

 

More articles

Latest article