திருமலையில் சிறுத்தைகள் நடமாடுவதால் மக்கள் அலறல்..

Must read

திருமலையில் சிறுத்தைகள் நடமாடுவதால் மக்கள் அலறல்..

கொரோனா காரணமாகப் பிறக்கப்பட்ட ஊரடங்கால், மலை வாசஸ்தலங்கள் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதனால் காட்டு விலங்குகள், சர்வ சாதாரணமாகச் சாலைகளில் நடமாடுகின்றன.

ஏழுமலையான் குடி கொண்டுள்ள திருமலையும் இதற்கு விதி விலக்கல்ல.

வனப்பகுதியில் இருந்து வரும்  சிறுத்தைகள் உள்ளிட்ட மிருகங்கள், சாலைகளில் புழங்க ஆரம்பித்துள்ளன.

அலிபிரியில் இருந்து திருமலைக்குப் பக்தர்கள் நடைப்பயணமாகச் செல்லும் பாதையில் அவ்வப்போது சிறுத்தைகள் நடமாடுவதை அந்த பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

அண்மையில் இரு போக்குவரத்து போலீசார், அலிபிரியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் திருமலைக்குச் சென்றுள்ளனர்.

அலிபிரியில் இருந்து நான்காவது கிலோமீட்டரில் சாலையில் சென்ற சிறுத்தை அவர்களைத் தாக்கியுள்ளது.

எப்படியோ தப்பிப் பிழைத்து இருவரும் திருமலையை அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சிறுத்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுத்தைகள் பகலிலும் நடமாடுவதால், அந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

-பா.பாரதி.

More articles

Latest article