யிலாடுதுறை

தாம் அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கொடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

 

வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பலமுனை போட்டி நிலவி வருகிறது.   இதில் திமுக, அதிமுக, மநீம, அமமுக ஆகிய அணிகளுடன் நாதக வும் களத்தில் உள்ளது.  அனைத்து அணியினரும் மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நேற்று மயிலாடுதுறையில் பிரசாரம் செய்தார்.  அப்போது அவர், “நான் அரசியலுக்கு வந்ததால் எனக்கு ரூ.300 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  ஆனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.  தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் நான் சிறு விளக்காக இருக்கவே விரும்புகிறேன்.

முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டுகிறது.  ஆனால் இரு தரப்பினருமே தாங்கள் ஊழல் செய்யவில்லை எனக் கூறவில்லை.   எனவே இந்த ஊழலுக்கு ஒரு முடிவு கட்டம் பொதுமக்கள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.