மும்பை
மும்பை அரசு மருத்துவமனைகளில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தட்டுப்பாடு உள்ள நேரத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மலேரியாவைக் கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு பெருமளவில் பயன்படுட்தபடுகிறது. இந்த மாத்திரைகள் தேவை அதிகம் உள்ளதால் மத்திய அரசு இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மருந்தை ஏற்றுமதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் தடை காரணமாக இந்தியா ஏற்றுமதி செய்யவில்லை. அதையொட்டி டிரம்ப் இந்தியாவுக்கு மறைமுக மிரட்டல் விடுத்தார். இந்தியா ஏற்றுமதி தடையை நீக்கி தற்போது சுமார் 4 லட்சம் மாத்திரைகள் அனுப்பிட உள்ளன.
இந்த மருந்து ஒவ்வொரு வாரமும் நகராட்சி மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு அளிப்பது வழக்கமாகும். இந்த மருந்தை நோயாளிகளுக்கு மட்டுமின்றி முன்னெச்சரிக்கையாக மருத்துவர்கள், செவிலி ர்கள், வார்டு ஊழியர்கள், சுத்திகரிப்பு தொழிலாளர்கள், கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் ஆகியோருக்கும் அளிக்கப்படுகிறது.
இந்த மருந்து தட்டுப்பாடு காரணமாக மும்பை மாநகராட்சியின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு இந்த வாரம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் அமெரிக்காவின் வற்புறுத்தலால் அனைத்து மாத்திரைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.