திருவனந்தபுரம்

னமழை காரணமாகக் கேரளாவில் அக்டோபர் 31 வரை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.   இதையொட்டி மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இந்த மாதம் 31 ஆம் தேதி வரை கேரளாவில் கன மழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதையொட்டி இன்று (அக்டோபர் 29) திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை (எல்லோ அலர்ட்) விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை (அக்டோபர் 30) மேலே உள்ள மாவட்டங்களுடன் கூடுதலாகப் பாலக்காடு மாவட்டத்திற்கும் பலத்த மழைக்கான எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

அடுத்த நாள் அக்டோபர்31ல் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கும் ‘எல்லோ அலர்ட்’ முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.