சண்டிகர்
விவசாயிகள் 3 ஆம் நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
விவசாயிகள் சங்கத்தினர் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டில்லியின் எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு 3ஆம் நாளாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.