சென்னை

மிழகத்தில் நிரம்பி வரும் அணைக்கட்டுகளால் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருந்த காலம் போய் தற்போது மின்சார தட்டுப்பாடு பெருமளவில் குறைந்துள்ளன.  குறிப்பாக பசுமை திட்டத்தின் கீழ் மின் உற்பத்தி  செய்யப்படும் திட்டங்களான நீர்மின், காற்றாலை, சூரிய ஒளி மற்றும் சாணவாயு மூலம் அதிகளவில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.   குறிப்பாகக் கடந்த சனிக்கிழமை அன்று மொத்த மின் உற்பத்தியில் பாதியளவுக்குப் பசுமை மின் உற்பத்தியின் மூலம் கிடைத்துள்ளன.

இது குறித்து மின்வாரிய மூத்த அதிகாரி ஒருவர், “தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணை தற்போது முழுவதுமாக நிரம்பி உள்ளதால் தண்ணீர் திறக்கப்படுகிறது.   இதனால் மேட்டூரில் நீர் உற்பத்தி அதிகரித்துள்ளது.  அது மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்திலும் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.   எனவே மேட்டூர் மற்றும் உள்ள அணைகளில் நீர் திறப்பு தொடர்ந்து நடப்பதால் நீர்மின் உற்பத்தியும் தொடரும் வாய்ப்பு உள்ளது.

நீலகிரி மாவட்டத்திலும் தற்போது நல்ல மழை பெய்து வருவதால் நீர்த் தேக்கங்களில் இருந்து நீர் திறந்து விடுவது தொடர்கிறது.  இதனாலும் நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.   காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் இன்னும் சில வாரங்களில் குறையக்கூடும்.  ஆயினும் நீர்மின் உற்பத்தி அதை ஈடு கட்டி விடும்.  அத்துடன் தற்போது நிலக்கரி  இருப்பும் அதிகரித்துள்ளதால் தேவைப்பாட்டால் அனல் மின் உற்பத்தி தொடங்கப்படும்.

சூரிய ஒளி மின் உற்பத்தி மையங்கள் அதிகமாக ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் உள்ளன.  அங்கு மழை அதிகம் இருக்காது என்பதால் மின் உற்பத்தி தடை பெற வாய்ப்பில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.